தமிழக அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்! காளைகளை துன்புறுத்தாத வகையில் ஜல்லிக்கட்டு…..
விலங்குகள் நலவாரியச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துபவர்களுக்கு, காளைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முன்கூட்டிச் சுற்றறிக்கை அனுப்பி அவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் விலங்குகள் நலவாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஆய்வு நடத்துவதற்கு வசதியாக, மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு நடைபெறுமிடங்களின் பட்டியலை அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விலங்குகள் நலவாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இந்த ஆய்வுக் குழுவில் உறுப்பினராக இருப்பார்.
இவர்கள் தவிர கோகர் ஆசிஸ், வினோத் ஜெயின், தினேஷ் பாபா, சிரவண் கிருஷ்ணன், சித்தார்த், பிரகாஷ் சாசா, அந்தோணி ரூபின், வள்ளியப்பன் ஆகிய 8பேரும் ஆய்வுக் குழுவில் உறுப்பினராக இருப்பார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
source: dinasuvadu.com