இலங்கை பந்து வீச்சாளருக்கு மீண்டும் பந்து வீச தடை..!
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியின் போது சட்டவிரோத வீசியதாக நடுவர்கள் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அவர் பந்துவீச்சை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அதன்படி டாக்டர் ஆதித்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் மேற்பார்வையில் அவரின் பந்துவீச்சு இயந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பந்து வீச்சு முறை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியிலிருந்து வெளியேறியுள்ளது.
4 முதல் 17 டிகிரி வரை அவரது பந்து வீச்சு சென்றதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் 2020 ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி வரை அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இரண்டாவது முறையாக பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.