பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு!
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் வரும் 22ஆம் தேதி உலக பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபரும் இதில் உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சென்று பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, இருதரப்பு உறவுகள், பொருளாதாரச் சூழல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.