என்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ! ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் !
நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் ரஜினியின் “பேட்ட” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் இமய மலைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுருந்தார்.இந்நிலையில் நடிகை மாளவிகா இது குறித்து கூறும் போது, இமயமலையில் நம்மை சுற்றி இருக்கும் நிசப்தம் நம்முடையது அல்ல என்றும் மாடர்ன் உடை அணிந்தாலும் ஓணம் பண்டிகை அன்று நம் பாரம்பரிய உடையான சேலையில் இருக்கும் மோகம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ளார்.