வெறும் 1000 ரூபாய் தான் !சுபஸ்ரீயின் உயிரை பறித்த லஞ்சம்?

Default Image

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ. 1,000  லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எனவே சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது  304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு லஞ்சம்  முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.வெளியான ஆடியோவில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர். அதில், பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினேன் என்று  ஜெயகோபால் என்னிடம் கூறினார் என்றும்  அதை அப்படியே ரிப்போர்ட் போட்டு கமிஷனருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். நீ போனையும் எடுப்பது இல்லை . செல்போன் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு என்று  காவல் உதவி ஆய்வாளர் கூறுகிறார்.இதற்கு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் நான் நேரில் வருகிறேன் என்று கூறுகிறார்.

இறுதியாக  காவல் உதவி ஆய்வாளர்   சிசிடிவி புட்டேஜை எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு வழி பண்ணிடுறேன் என்று கூறுவதோடு ஆடியோ முடிவடைகிறது.இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்