இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிக்குமாம் உலகவங்கி தகவல் எப்படி…??

 
2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கியானது தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. உலக பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவி்ல் 1000,500 ரூபாய் நோட்டு ஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்திருந்தது.ஆனால் தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment