வரலாற்றில் இன்று ஜனவரி 10 பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடுதலை…!!
வரலாற்றில் இன்று ஜனவரி 10 , 1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டு தாயகமான வங்காளதேசம் திரும்பினார் .
மேற்கு பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சி செய்தனர். மாபெரும் புரட்சி வெடித்தது. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறைவைக்கப்பட்டார்.. கிழக்குப் பாகிஸ்தானின் ஏராளமானவர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். மேற்கு பாகிஸ்தானின் ராணுவ அடக்குமுறைக்கு எதிராகப் போரிட முக்தி வாஹினி எனும் மக்கள் படை உருவானது. இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவ முன்வந்தது. இந்திய ராணுவத்துடன் உதவியுடன் முக்தி வாஹினி படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர். இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. வங்க தேசம் உருவானது. ஜனவரி 12ம் தேதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்காளதேசத்தின் பிரதமராக பதவியேற்றார்.