இன்று பழம் பெரும் நடிகரும் நாடகக் கலைஞரும் ஆன ஆர். எஸ் மனோஹரின் நினைவு நாள்…!
இன்று பழம் பெரும் நடிகரும் நாடகக் கலைஞரும் ஆன ஆர். எஸ் மனோஹரின் நினைவு நாள். (10.1.2006) இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவராவார். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமைசேர்க்கும் வகையில் பிரமாண்டமான சரித்திர மற்றும் புராண நாடகங்களை அளித்தவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 8000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். ராவணேஸ்வரன் என்ற இவரது நாடகத்தில் ராவணனை கதாநாயகனாக்கி அவனை நல்லவனாகக் காட்டி அதில் வெற்றியும் பெற்ற துணிச்சல் மிக்க சாதனையாளர். இவரது நாடகங்களின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு காரணமாக அவை “டிராமாஸ்கோப்” என்றழைக்கப்பட்டன.