சென்னையில் விடிய விடிய மழை !இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் மழை பரவலாக பெய்தது. இடிமின்னலுடன்
ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம்,சேலையூர் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது.இதனால் சாலையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது.
இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ள.து