மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பின் போது காஷ்மீர் முக்கிய தலைப்பு அல்ல!
பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடக்கும் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் “காஷ்மீர் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இது பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான “மூலோபாய சிந்தனையை” உள்ளடக்கிய பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.