INDvsSA: டி20 போட்டியில் ஹிட்மேனை விட அதிக ரன்கள் விளாசிய விராட்..!

இந்தியாவில் தென்னாபிரிக்கா அணி சுற்று பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது,.இதை தொடர்ந்து நேற்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. ;முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார்.
இந்தப் போட்டிக்கு முன் கோலி சர்வேதேச டி20 போட்டியில் 2,369 , ரோகித் சர்மா 2,422 ரன்களுடன் இருந்தனர். ஆனால் இப்போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் ரோகித் சர்மா 2,434 ரன்களாக உள்ளது. விராட் கோலி 72 ரன்கள் அடித்ததன் மூலம் 2,441 ரன்களாக உயர்ந்தது. இதன் மூலம் ரோகித் சர்மாவை விட அதிக ரன்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025