கிடுகிடுவென உயர்ந்த அபராத தொகை! தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடவில்லை!
நாடு முழுவதும் புதிய வாகனசட்டம் அமல்படுத்தப்பட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் லாரி ஓட்டுநர்களுக்குத்தான் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது லாரி ஓட்டுனர்களை பீதியடைய வைத்துள்ளது.
இதனை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சம்மேளம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வேலைநிறுத்ததிற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்ததால், தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்திற்க்கும் அதிகமான லாரிகள் இயங்கவில்லை.