தெய்வீக சக்தி கொண்டது என்று நினைத்து மலைபாம்பிற்கு பூஜை செய்த மக்கள் ! அதை மீட்டெடுத்த அதிகாரிகள் !
ஆப்ரிக்காவில் தான்சானியாவின் காசாலா என்ற காட்டு பகுதியில் பத்தடி நீலம் கொண்ட மலை பாம்பை ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிடித்துள்ளனர். தெய்வீக சக்தி கொண்டது என்று நினைத்து மலை பாம்பை பிடித்து ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் இந்த மலை பாம்பிற்கு பல உணவுகளை படைத்தும் வழிபட்டுள்ளனர். அந்த மலைப்பாம்புக்கு உணவுகள் கொடுத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று நினைத்து பக்தர்கள் மலைப்பாம்பு திணறும் அளவிற்கு உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும் ஆட்டை வெட்டி படைத்தையும் உண்ணாமல் மலைப்பாம்பு அதன் இரத்தத்தை மட்டும் உட்கொண்டது.இந்த சூழலில் அதிகாரிகள் அந்த பாம்பை மீட்டுள்ளனர்.