“கர்நாடகாவில் பாஜகவால் வெற்றி பெறவே முடியாது” – சித்தராமையா சவால்!!

Default Image

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகா வந்துள்ளார். பாஜக கட்சியை பலப்படுத்த போவதாகவும், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதாகவும் சொல்கிறார்கள். அமித்ஷாவின் சுற்று பயணத்தால் கர்நாடக பாஜகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை.
அமித்ஷா வருகையால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் அமித்ஷா வந்தாலும் சரி, பிரதமர் மோடி வந்தாலும் சரி கர்நாடகத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்ததால் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தார்கள். அதனால்  பாஜக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி கூறினார்.
இதுவரை 4 லட்சம் பேர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.
உத்தரபிரதேசத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அங்கு பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. குழந்தைகள் உயிரிழப்பு குறித்து முதலில் அவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்