CPL : கிறிஸ் கெய்ல்13,000 ரன்களை கடந்து டி20 யில் புதிய மைல்கல் சாதனை..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதினர்.
Yet another Milestone for the #UniverseBoss Chris Gayle 13000 runs in T20s!!! #JTvBT #CPL19 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/S8MnqmP45h
— CPL T20 (@CPL) September 15, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 140 ரன்கள் எடுத்தனர். இதை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் அணி 18.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 13,000 ரன்கள் கடந்து புதிய மைல்கல் சாதனையை படைத்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025