ஏழு வருடங்களுக்கு பிறகு பாலிவுட்டில் ரீமேக்காகும் ஆர்யா-மாதவன் சூப்பர் ஹிட் திரைப்படம்!

ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டை. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். ஆக்ஷன், குடும்ப சென்டிமெண்ட் கலந்து இப்படம் உருவாகியிருந்தது.
தற்போது ஏழு வருடங்கள் கழித்து இப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. பாலிவுட்டில் நடிகர் ஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெராப்பும், மாதவன் கதாபாத்திரத்தில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் நடிக்க உள்ளனராம். ஹீரோயினாக ஷர்தா கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாகி-1, பாகி-2 வெற்றி பட வரிசையாக பாகி-3ஆம் பாகமாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.