கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞனுக்கு அதிரடி தீர்ப்பு!

Default Image

கோவை மாவட்டத்தில் மோத்தேபாளையம் எனும் ஊரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் அந்த பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திக்கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவத்தை அடுத்து போலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு பின், தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரிடம் விசாரணை நடைபெற்றது தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், தடையங்களை மறைத்ததற்காக 7 ஆண்டுகளும் 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பினை அடுத்து, தினேஷ் குமாரை, போலிசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Tamilnadu CM MK Stalin - PMK Leader Anbumani Ramadoss
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone