இந்தி திணிப்பு-செப்டம்பர் 20-ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இன்று சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆகவே இந்த கூட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.