ஒரே சிறையில் லாலுவும் அவரது உதவியாளர்களும் !
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு சற்று முன்பு லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் லக் ஷ்மண் மகாதோ மற்றும் மதன் யாதவ் என்ற இருவர் மீது லக் ஷ்மண் யாதவின் பக்கத்து வீட்டுக்காரரான சுமீத் யாதவ் என்பவர் தன்னை தாக்கியதாகவும் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாகவும் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரும் லாலு சிறை செல்வதற்கு சற்று முன்னதாக பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுபிரசாத் கடந்த முறை சிறை சென்றபோதும் மதன் யாதவ் இதே தந்திரத்தை கடைபிடித்து சிறை சென்றதாகக் கூறப்படுகிறது. சிறையில் லாலுவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றே இருவரும் சரண் அடைந்து சிறை சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
source: dinasuvadu.com