ஆஸ்திரேலியாவில் பச்சைநிற கடல் ஆமையின் பாலின விகிதம் பாதிப்பு !

ஆஸ்திரேலியாவில்  பச்சைநிற கடல் ஆமைகளின் கரு ஆணாக உருவாகிறதா பெண்ணாக உருவாகிறதா என்பது, குஞ்சு பொரிக்கும் மணலின் வெப்ப நிலையை பொறுத்தது ஆகும். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டுத் தொகுதி அருகே வசிக்கும் கடல் ஆமைகளின் பாலின விகிதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், வடக்கு பவளப்பாறை தொகுதி அருகே கடற்கரையில் பொரிந்த ஆமைக் குஞ்சுகள் 99 சதவீதம் அளவுக்கு பெண்ணாக இருந்தது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடல்நீர் சூடாவதால், வெப்பநிலை அதிகரித்து அதன் காரணமாக பெண்ணின ஆமைக் குஞ்சுகளாக பிறப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com

Leave a Comment