டப்ஸ் மாஸ் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது! பிரபல நடிகை ஓபன் டாக்!
நடிகை வர்ஷா போலம்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில், நடிகை வர்ஷா போலம்மா நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ ராஜா ராணி படத்தில், நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ் மாஷ் செய்து இணையத்தில் வெளியிட்டேன். அதன் வாயிலாக சதுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 96 படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்ததது. தற்போது ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடிப்பதாகவும், இனி தொடர்ந்து நாயகியாகவே நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.