காதலனின் முதல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் பட தலைப்புடன் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவர்தான் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நம்பர் 1 ஹீரோயினாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவர் தனது 65வது படத்தில் இன்றுமுதல் நடித்து வருகிறார். இந்த படத்தை நயனின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்ச்சர்ஸ் மூலம் தயாரிக்கும் முதல் படமாக தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு நெற்றிக்கண் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றிபெற்ற திரைப்பட தலைப்பு ஆகும். இந்த தலைப்பை கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து விக்னேஷ் சிவன் முறையாக பெற்றதாக தெரிகிறது.
இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அவள் எனும் திரில்லர் படத்தை எடுத்து உள்ளார். இந்த படமும் திரில்லர் கதைக்களம் தான் என கூறப்படுகிறது.