பிகில் படதிற்கான பேனருக்கு தடைபோட்ட தளபதி விஜய்!

சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக ரசிகர்கள் கட்அவுட் பேனர் என கொண்டாட காத்திருந்தனர். அந்த வேளையில் பேனரால் சுபஸ்ரீ இறந்துவிட்ட செய்தி வெளியானதால், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக எந்தவித பேனர்களும் வைக்க வேண்டாம் என விஜய் அவர்கள் கூறியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025