கூடுதலாக 40 திரையரங்குகளை கைப்பற்றிய சிவப்பு மஞ்சள் பச்சை!
பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படம் சென்ற வாரம் (செப்டம்பர் 6 ) ரிலீசானது.
இந்த படத்தில் பைக் ரேஸ், சேசிங், அக்கா – தம்பி செண்டிமெண்ட், மாமா – மச்சான் உறவு என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது தமிழகத்தில் மட்டும் கூடுதலாக 40 திரையரங்குகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.