ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினம்! டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்…

Default Image
மரபணு சோதனையில் ஹர் கோவிந்த் குரானாவின் பணியை பாராட்டி 13 நாடுகளில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
 ராய்பூரில் சிறிய கிராமம் ஒன்றில் ஜனவரி 9-ம் தேதி 1922 ஆம் ஆண்டு பிறந்த ஹர் கோவிந்த் குரானா. குரானாவின் குடும்பம் அவர்களது கிரமத்தில் படித்த குடும்பமாக அறியப்பட்டது. குரானாவின் தந்தை அவரது ஐந்து குழந்தைகளுக்கும் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தார்.
தொடர்ந்து கல்வி உதவி தொகை மூலம் இளநிலை பட்டப்படிப்பை 1943ஆம் ஆண்டும், முதுகலை பட்டப்படிப்பை 1945 ஆம் ஆண்டு முடித்தார் குரானா. இதனைத் தொடர்ந்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்று லண்டனில் பயிற்சி பெற்றார் ஹர் கோவிந்த் குரானா.
புரோட்டீன்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் ஆகியவற்றில் ஹர்  கோவிந்த் குரானா  நிபுணராக விளங்கினார்.
1970-ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் ஆன குரானா அங்கு மரபுக் குறி தொடர்பான  ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது.
1968 ஆம் ஆண்டு நியூக்ளியீடைட்ஸ், நியூகிளிக் ஆசுட் தொடர்பான அராய்ச்சிக்கான நோபல் பரிசு மார்ஷல் டபிள்யூ. நீரன்பெர்க், ராபர்ட் டபிள்யு. ஹோலே ஆகியோருடன் குரானாவுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மரபணு உலகில் பல்வேறு பணிகளை புரிந்த, குரனா நவம்பர் 9-ம் தேதி, 2011 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்