பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மத்திய அரசின் சிறப்பு குழு 23ஆம் தேதி ஆய்வு!
சென்னையை அடுத்து, இருக்கும் பழவேற்காடு ஏரி முகதுவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசின் சுற்று சூழல் துறை ஆய்வு நடத்த உள்ளது.
இந்த முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மிகவு சிரமமடைந்தனர். இதனால், அந்த பகுதியை தூர்வாரி அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல எதுவாக தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மாநில அரசானது மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை அடுத்து, வருகிற 23ஆம் தேதி பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மத்திய அரசின் சுற்றுசூழல் துறை குழு ஆய்வு நடத்த உள்ளது. இந்த குழுவின் ஆய்வை கணக்கில் கொண்டு தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தூண்டில் வளைவு மூலம் அப்பகுதி மீனவமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என் கூறப்படுகிறது.