19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை-நிர்மலா சீதாராமன்

Default Image

வருகின்ற 19-ம் தேதி  பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன. நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும்.உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19-ம் தேதி  பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். வங்கி சீர்திருத்தத்தை தொடர்ந்து வரிசீர்திருத்தம் கொண்டுவர பரிசீலிக்கப் படுகிறது என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்