இந்திய ராணுவம் அதிரடி !உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் எடுத்துச் சென்ற பாகிஸ்தான்
இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்றது பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.பின்னர் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்றனர் பாகிஸ்தான் ராணுவத்தினர்.