மாதவனை இயக்குகிறார் சற்குணம் ….அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது …
விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார்.
இப்படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் ‘ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2’ மற்றும் ‘ட்ராகுலா அண்டோல்டு’ படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார்.
‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் இயக்குனர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் ரசிக்கும் விதமாகவும் படமாக்க இருக்கிறோம். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இவ்வாறு சற்குணம் தெரிவித்திருக்கிறார்.
source: dinasuvadu.com