ஒரு ஆணுக்கு இது தான் அழகு! இதெல்லாம் அழகு இல்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!
நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது வருங்கால கணவர் குறித்து பேசுகையில், தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராகவும், அவளை பாதுகாப்பவராகவும் இருப்பதுதான் ஆணுக்கான அழகு என்றும், அப்படிப்பட்ட ஆணை தான் விரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முக வாசிகரமோ, உடல் அழகோ, சாகசங்கள் செய்வதோ ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.