படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா நடிப்பு…பரபப்பு
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தால், மலையாள திரையுலகில் நடிகர்கள் அணி, நடிகைகள் அணி என்று இரண்டு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சங்கம் அம்மா-வுக்கு எதிராக நடிகைகள் தனி சங்கம் உருவாக்கியுள்ளனர். இதற்கு பதிலளித்த நடிகர் சங்க தலைவர் இன்னசெண்ட், நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவதில்லை.
ஒரு சில நடிகைகள் வாய்ப்புக்காக அப்படி செய்வதாக கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சுக்கு நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை ஹிமா சங்கர் கூறுகையில், நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படிக்கும் போதே மலையாள சினிமா உலகை சேர்ந்த இரண்டு பேர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கூறினர்.
அப்போது தனக்கு அது புரியவில்லை. அதன் பின் அவர்களே அதனை விவரித்து கூறிய போது அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட பட வாய்ப்புகள் தனக்கு தேவையில்லை என கூறி அவர்களை அனுப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.