ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை-துரைமுருகன்
முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பற்றியோ மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், வெளிப்படையான நிர்வாகத் திறமை மற்றும் ஊழல் இல்லாமல் விரைந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி போன்ற நேர்மையான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டை வெகுவாகத் திரட்டியது தி.மு.க. ஆட்சி.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சி பற்றியோ – தலைவர் கலைஞர் அவர்கள் பற்றியோ கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியோ மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை என்று தெரிவித்துள்ளார்.