வருமான வரித்துறையினர் பிசிசிஐ அலுவலகத்தில் சோதனை!

Default Image
ஆண்டுதோறும் பிசிசிஐ அலுவலகம், வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறது. தற்போது பிசிசிஐ-யை தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி நிர்வகித்து வருகிறார். மேலும் அவருக்கு உறுதுணையாக சந்தோஷ் ரங்கநேக்கர் (தலைமை நிதி அதிகாரி) உள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இருவரும் தங்களது பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிசிசிஐ, தனது வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பித்திருந்தது. இதில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் அமைந்துள்ள பிசிசிஐ அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பின்னர் அங்குள்ள ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டு சோதனைகளை நடத்தினர். மொத்தம் 15 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து ராகுல் ஜோரி, சந்தோஷ் ரங்கநேக்கர் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு வந்த அதிகாரிகள் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டனர். அதே நேரத்தில் பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய விவகாரம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்