கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் அறிவிப்பு ….
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றடிக்கும் என்று பாலசந்திரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முடிந்து போன நிலையில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர் …
source: dinasuvadu.com
வடகிழக்கு பருவமழை முடிந்து போன நிலையில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர் …
source: dinasuvadu.com