பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளமாட்டேன்-மு.க.ஸ்டாலின் அறிக்கை
பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வைக்க வேண்டாம்.
இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ ,கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் கலந்து கொள்ளமாட்டேன்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அனுமதிபெற்று ஓன்று அல்லது 2 பேனர்கள் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.