வீட்டுவசதி துறையை மேம்படுத்த துணை முதல்வர் ஓபிஎஸ் வெளிநாட்டு பயணம்?!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அமெரிக்கா, துபாய், லண்டன் என வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 8,835 கோடி ருபாய்க்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளான். இதன்மூலம் 35 ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்கும் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, தபோது துணை முதல்வரும் வெளிநாட்டு பயணம்மேற்கொள்ள உள்ளாராம். இவர் கட்டுப்பாட்டில் வீட்டு வசதித்துறை உள்ளதால், அது சம்பந்தமாக, அதவது குறைந்த விலையில் வீடுகள் கட்டுவதற்கு, கட்டுமான பணிகள் குறித்தும், சிங்கப்பூர், சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளுக்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.