அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கெடு!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பேச்சுவார்த்தை நடத்த அரசு கவுரவம் பார்க்கவில்லை எனவும், தொழிற்சங்கத்தினர்தான் கவுரவம் பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், இன்றைக்குள் பணிக்குத் திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.
source: dinasuvadu.com