மாற்று திறனாளிகளுக்காக திரையிடப்பட்ட விஸ்வாசம்! பாராட்டுகளை பெற்றுவரும் சிவா!
தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தைசிறுத்தை சிவா இயக்கி இருந்தார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி, தந்தை மக்களுக்கான பாசத்தை திரையில் அற்புதமாக காட்டியதால் படம் கும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை ஈட்டியது.
இந்த படம் அண்மையில் மாற்று திறனாளிகளுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் ஷோவில் இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகை ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர். திரைப்படத்தை பார்த்த அனைவரும் இயக்குனர் சிறுத்தை சிவாவை வெகுவாக பாராட்டினர். அதில் ஒரு ரசிகர் சிறுத்தை சிவா குரலில் மிமிக்ரி செய்து சிவாவை ஆச்சர்யப்படுத்தினர்.