சென்னையில் இளம்பெண்ணின் உயிரை பறித்த பேனர் கலாசாரம் !
சென்னையில் இளம்பெண் மீது பேனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்ததால், தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
தமிழகத்தில் சாலை நடுவே பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்ததால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த பெண் பெயர் சுபஸ்ரீ என்றும் அவர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.