அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஹாங்காங் புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமான பணிப்பெண்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன.
அவர்களில் ஒருவரின் பெட்டியில், இந்திய மதிப்பில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஹவாலா பணம் என்றும், ஹாங்காங் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். சம்பந்தப்பட்ட விமானப் பணிப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com