குடியிருப்புகளின் மத்தியில் இருந்த பட்டறையில் பற்றிய தீ விபத்து!மும்பையில் நள்ளிரவில் விபரீதம்…
மும்பையில் அபிலாஷா நகரில் ரே ரோடு பகுதியில் இயங்கும் பட்டறை ஒன்றில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. தகவலின்பேரில் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், போராடி நெருப்பை கட்டுக்குள் வந்தனர்.
மின்கசிவின் காரணமாக தீப்பற்றியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை. கடந்த 29-ம் தேதி, மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் தீப்பிடித்து, 14 பேர் பலியான சோகத்தின் வடு மறையும் முன் மற்றொரு தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com