பிக் பாஸ் கமல் மக்கள் நீதி மைய கட்சி தலைவராக களம் இறங்கி செய்த வேலையை பாருங்கள்!
உலக நாயகன் கமலஹாசன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் ஆவார். இவர் தற்போது பிரபல தமிழ் நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இதோடு, இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டு, இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, தனது கட்சி பணியிலும் தற்போது இறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற 60 வருட கலை பயணத்தை சென்னை வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மைய படிப்பகத்தில் பயிலும் மாணவர்களுடன் கமல் கொண்டாடியுளார். இதோ அதற்கான புகைப்படம்,
மக்கள் நீதி மய்ய கட்சியின் *சென்னை வட கிழக்கு* மாவட்டம் சார்பில் நடத்தப்படும் மக்கள் நீதி மய்யம் படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள், இன்றுகட்சித் *தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan சந்தித்து, நம்மவரின் 60 வருட கலைப் பயணத்தை கொண்டாடினர். @KHOurPride@KamalismForever #KamalHaasan pic.twitter.com/r4yMrPAdts
— Diamond Babu (@idiamondbabu) September 11, 2019