விஷால் – தமன்னாவின் ‘ஆக்சன்’-க்கான சிறு முன்னோட்டம் நாளை முதல்…

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தற்போது மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் ஆக்சன். ஏற்கனவே மதகஜராஜா ( ரிலீஸ் ஆகவில்லை), ஆம்பள ஆகிய படங்களில் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து இருந்தார்.
தற்போது உருவாகி வரும் ஆக்சன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்திற்காக இயக்குனர் சுந்தர்.சி தனது நகைச்சுவை பாணியில் இருந்து விலகி, முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025