தளபதி விஜயுடன் நடிக்க உள்ள யூ-டியூப் பிரபலங்கள்?! தளபதி -64 புது அப்டேட்!

தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பிகில் பட ரிலீசிற்கு பின் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிக்க வைக்க முற்றிலும் இளம் நடிகர்களை இயக்குனர் அறிமுகமாகி வருகிறாராம். அதிலும் யூ -டியூபில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய சேனல்காரர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்தது ஒவ்வொரு யு-டியூப் சேனல் மூலம் ஒருவரை செலக்ட் செய்து வருகிறாராம். இதற்கான ஆடிசனை இயக்குனர் ரகசியமாக நடத்தி வருகிறாராம்.
இந்த ஆடிஷனில் பிளாக் ஷிப், பரிதாபங்கள், நாகால்ட்டிஸ், மைக் செட் என முக்கிய சேனலை சேர்ந்தவர்கள் தளபதி 64இல் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் இப்பட நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.