தி ரியல் ஹீரோ அஹமது கஃபீல்…!!!
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையருக்கு பணம் கொடுக்காததால் 66 பச்சிளம் குழந்தைகள் அநியாயமான முறையில் இறந்துபோன சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் மேலும் பல குழந்தைகளின் உயிர் போகாமல் இருக்க காரணமான டாக்டர் அஹமது கஃபீலை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.
மருத்துவமனையில் அடுத்தடுத்து 66 குழந்தைகள் உயிர் பிரிந்ததும் உடனடியாக மருத்துவர் ஆக்ஸிஜன் சப்ளையரை தொடர்பு கொண்டுள்ளார்.அரசாங்கம் நிலுவை பணத்தை கொடுத்தால் மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டரை தருவோம் என கறாராக கூறி தொடர்பை துண்டித்தார்.
உடனடியாக தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களை நடுஇரவு என்றும் பாராமல் நேரில் சென்று அவர்களை அணுகி நிலைமையை கூறி சுமார் 6 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கினார்.
ஆனாலும் அது போதாது என்ற அடிப்படையில் தனக்கு தெரிந்த மருத்துவ நிர்வாகத்தையும் அணுகியதன் பிரதிபலனாக அதிகாலை சுமார் 6 மணியளவில் கிட்டத்தட்ட 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்க பிற மருத்துவமனை நிர்வாகங்கள் சம்மதித்தது.(அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்)
டாக்டர் அஹமது கஃபீலின் துரிதமான இந்த செயல்பாட்டால் பல குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.மருத்துவர்கள் சேவை மனப்பான்மை குணத்தை பெற்றவர்கள் என்பதை வாயால் கூறாமல் செயலால் நிரூபிக்க வேண்டும்.
அந்த வகையில் டாக்டர் அஹமது கஃபீல்,மனித நேயத்தோடு ஆக்ஸிஜன் சிலிண்டரை வழங்கிய பிற மருத்துவமனை நிர்வாகங்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்.
சையத் அமீர்