சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிவப்பு, மஞ்சள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில், நடிகர் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக, கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல மாடல் திவ்ய பாரதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பதன் மூலம், திவ்யா பாரதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இன்று மாலை வெளியிடவுள்ளார். இவ்வாறு கிரிக்கெட் வீரர் போஸ்டரை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். இதனால் ஜி.வி.பிரகாஷின் ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
India varalaatril….
mudhal muraiyaaga…
First Look’ai release seiyum Balae Bowler Bhajji, @harbhajan_singh???? #AFF7FirstLookTomorrow at 6 pm.@gvprakash @dir_Sathish @Dili_AFF @divyabarti2801 @gopiprasannaa @k_pooranesh @sanlokesh @Donechannel1 @UptownIdeas pic.twitter.com/ylu0TOliUv— Axess film factory (@AxessFilm) September 10, 2019