என்ன ஒரு மரியாதை! முகன் அம்மாவின் காலில் விழுந்த தர்சன்!
நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் பிரபலங்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த டாஸ்கின்படி முதன் முதலாக முகனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இதனையடுத்து, முகனின் தாயார், அனைவரையும் கட்டியணைக்கிறார். தர்சனிடம் அவர் வரும் போது தர்சன் முகன் தாயாரின் காலில் விழுந்து வணங்குகிறார்.