பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணணுக்கு அடித்த ஜாக்பாட்!
நடிகர் சரவணன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொண்டார். இவர் சேரனை மரியாதை குறைவாக பேசியதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தமிழக அரசு குறைந்த செலவில் வெளியிடப்படும் தரமான திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்கவுள்ளது. இதனையடுத்து, 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்ய திரைப்பட மானியக்குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குழுவில், நடிகர் சரவணன் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் உள்ளார்.