கோவில்பட்டியில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி முறையிட வந்தவர்களிடம் குறையை கேட்க்காமல் " வாட்ஸ்அப் " பயன்படுத்திய கோட்டாட்சியர்…!!
தூத்துக்குடி:கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டு நாயக்கர் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பின்னர்,நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோட்டாட்சியர் அனிதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர்
மல்லிகா, நகரச் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையின் போது பிரட்சனைக்கு தீர்வு காணாமல் கோட்டாட்சியர் அனிதா கைப்பேசியில் வாட்ஸ்அப் பயன்படுத்தியுள்ளார்.இது அங்கிருந்த அனைவரையும் அலட்சியம் படுத்தியதை காட்டுகிறது.கோட்டாட்சியரின் இச்செயலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கண்டித்து உள்ளனர்.