அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சகத்துக்கு சீல் -சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் விதிகளை மீறி பல இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும்.மேலும் விளம்பர பதாகை அனுமதி எண் ,நாள்,அளவு ,அனுமதி கால அவகாசம் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேனர்கள் வைக்க முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.